கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்பில் திடீர் தீ விபத்து..!
கிரிமியாவில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் எட்டு பேர் உயிரிழந்தனர்.
மின் சாதன பொருட்களில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. நெடுஞ்சாலை கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த இரண்டு மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்ட போது, அங்கு 185 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யாவின் புலனாய்வுக் குழுவினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments