போலீஸ்காரர் மனைவியை காதலித்த நகைக்கடைக்காரர், கூலிப்படையை ஏவி சம்பவம்..! ஜெய்ஹிந்துபுரம் காவலர் கைது..!
மதுரை நகை கடை அதிபரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக குற்றப்பிரிவு காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். துணிவியாபாரம் செய்த காவலர் மனைவியை காதல் வலையில் வீழ்த்தியதால் நகைக்கடை அதிபருக்கு நிகழ்ந்த பயங்கரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
மதுரை இந்து மக்கள் கட்சியின் தென்மாவட்ட துணைச் செயலாளரும், நகைகடை அதிபருமான மணிகண்டன் மர்மக்கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையின் பின்னனியில் ரவுடிகளுடன் பழக்க வழக்கத்தில் இருந்த ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய குற்றப்பிரிவு காவலர் ஹரஹர பாபுவை பிடித்து போலீசார் விசாரித்த போது பல திருக்கிடும் தகவல் தெரியவந்தது.
நகை வாங்க சென்ற போது மணிகணடனிடம், தனது மனைவியை காவலர் ஹரிஹரபாபு அறிமுகம் செய்துவைத்துள்ளார். அன்று முதல் ஆடைகள் விற்பனை செய்து வரும் காவலரின் மனைவியும், மணிகண்டனும் தொழில் முறை நண்பர்களாகி உள்ளனர்.
ஒரு கட்டத்தில் கணவருக்கு தெரியாமல் சந்தித்துக் கொள்ளும் அளவுக்கு தொழில் பழக்கம் நெருக்கமானதாக கூறப்படுகின்றது. இதற்க்கிடையே வியாபாரத்திற்காக கொடுத்த பணத்தை மணிகண்டனிடம், ஹரஹர பாபு திருப்பிக் கேட்டுள்ளார்.
அவர் கொடுக்காமல் இழுத்தடித்த நிலையில், தனது மனைவியையும் காதல் வலையில் வீழ்த்தி அபகரித்ததால் மணிகண்டன் மீது ஹரி ஹர பாபு காண்டானார்.
ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வரும் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு 75 ஆயிரம் ரூபயை கொடுத்து கூலிப்படையாக்கிய, ஹரிஹரபாபு அவர்களை ஏவி மணிகண்டனை தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் காவலர் ஹரிஹரபாபு , ஹைதர் அலி, பல்லு கார்த்திக், அழகு பாண்டி,ஐய்யப்பன்,இருட்டு மணி உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு சாட்சியாகி உள்ளது இந்த கொலை சம்பவம்.
Comments