அதானி குழுமத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விளக்கம் கேட்க ஆர்.பி.ஐ உத்தரவு..!

0 1492

அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கியுள்ள கடன்கள், முதலீடுகள் மற்றும் அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக விளக்கம் அளிக்க பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ஹிண்டன்பெர்க் அறிக்கையை அடுத்து அதானி குழும பங்குகள் 30 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளதால் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தற்போது கவுதம் அதானி 16-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

முதலீட்டார்களின் பாதுகாப்பு கருதி 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான FPO எனப்படும் உரிமை பங்கு வெளியீட்டினையும் அதானி குழுமம் ரத்து செய்துள்ளது. இதனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பணம் திரும்பக் கிடைக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments