இந்திய விண்வெளி வீரர் நாசா மையத்துக்குச் சென்று பயிற்சி பெறுவார் என அறிவிப்பு..!
2024ம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் நாசாவின் விஞ்ஞானிகள் இத்திட்டத்தில் இந்திய நிறுவனத்தை இணைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக இந்திய விண்வெளி வீரர் ஒருவர் நாசா தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரோ விஞ்ஞானிக்கு நாசா விண்வெளி மையத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் துறையில் இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து பல்வேறு கூட்டு திட்டங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும், அதில் நிலவுக்கு வர்த்தக முறையில் மனிதரை அனுப்பி வைக்கும் திட்டமும் ஒன்று என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments