நடைபாதை தடுப்பு கம்பிகளை மின்கம்பங்களுடன் 'வெல்டிங்’ செய்து விபரீதம்..!
கூடலூர் அருகே, நடைபாதை தடுப்பு கம்பிகளை சாலையோர மின்கம்பங்களுடன் இணைத்து வெல்டிங் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கூடலூர் நகராட்சி சார்பில், பேருந்து நிலையம் முதல் சிக்னல் வரையில் நடைபாதை தடுப்புகளை அமைத்த ஒப்பந்த ஊழியர்கள், இடையில் இருந்த மின்கம்பங்களுடன் கம்பிகளை சேர்த்து வெல்டிங் செய்து, ஆபத்தான முறையில் தடுப்புகள் அமைத்திருந்ததை ஒரு நபர் வீடியோ எடுத்து வெளியிட்டார்.
இதையடுத்து அந்த தடுப்புகள் தற்காலிகமாக மின்கம்பத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு சிறிது இடைவெளிவிடப்பட்டுள்ளது
Comments