தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கியது..!
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு TANCET மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான CEETA தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது.
விண்ணப்பதாரர்கள் tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். TANCET தேர்வுகள் மார்ச் 25 ஆம் தேதியும், CEETA தேர்வுகள் மார்ச் 26 அன்றும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக நுழைவு தேர்விற்கு விண்ணப்பிக்கும் போதே கலந்தாய்விற்கும் சேர்த்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Comments