சென்னை விமான நிலையத்தில் 'ஏர் இந்தியா'விடம் சக்கர நாற்காலி கூட இல்லையா என குஷ்பூ கேள்வி..!
முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டு போட்டபடி, சென்னை விமான நிலையம் வந்த குஷ்பூ, ஏர் இந்தியா குழுவினரிடம் சக்கர நாற்காலி கேட்டு அரை மணி நேரம் காத்திருந்ததாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடைசியில், வேறொரு விமான சேவை நிறுவனத்திடமிருந்து சக்கர நாற்காலியை வாங்கிவந்து தந்ததாக தெரிவித்த குஷ்பூ, ஏர் இந்தியாவிடம் சக்கர நாற்காலி கூட இல்லையா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
குஷ்பூவின் இந்த குற்றச்சாட்டுக்கு டுவிட்டரில் மன்னிப்பு கோரி உள்ளது ஏர் இந்தியா நிறுவனம்
Comments