ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிப்பு

0 2226

ஆந்திராவின் புதிய தலைநகரமாக விசாகப்பட்டினம் செயல்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபின், ஆந்திராவிற்கு அமராவதி, கர்னூல், விசாகப்பட்டினம் என 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை அறிவித்த ஜெகன் மோகன் ரெட்டி, மார்ச் 3, 4ஆம் தேதிகளில் அங்கு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றார்.

மேலும், அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகபட்டினத்தில் இருந்தே நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments