பெருந்தொற்று காலத்தில் இழந்த பொருளாதாரம் கிட்டத்தட்ட மீட்டெடுக்கப்பட்டது - பொருளாதார ஆய்வறிக்கை
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இழந்த நாட்டின் பொருளாதாரம் கிட்டத்தட்ட மீட்டெடுக்கப்பட்டதாகவும், மந்த நிலை மாறி மீண்டும் ஆற்றல் பெற்றுள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், நடப்பு நிதி ஆண்டில் மார்ச் மாத நிறைவுடன் பொருளாதார வளர்ச்சி ஏழு சதவீதமாக இருக்கும் என்றும், 2023-24ஆம் நிதியாண்டில் 6 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிப்பதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments