தேசிய கீதத்தை மதிக்காமல் அமர்ந்தபடி செல்போனில் பேசிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் தேசிய கீதம் பாடப்பட்டபோது, அதனை மதிக்காமல் செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
பொம்மைக்குட்டை மேட்டில் கடந்த 28ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டது அங்கு பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் இருக்கையில் அமர்ந்தபடி செல்போனில் பேசியதால் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்
Comments