டான்சர் ரமேஷை 2 வது மனைவி கம்பால் விளாசிய வீடியோ..! வலிதாங்காமல் கதறும் சோகம்

0 8623

டான்சர் ரமேஷ் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் அவரது 2 வது மனைவி ரமேஷை வீட்டுக்குள் பூட்டி வைத்து கம்பால் அடித்து துன்புறுத்திய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் அடுக்குமாடிக் குடியிருப்பில் 10-வது மாடியில் இருந்து விழுந்து டான்சர் ரமேஷ் பலியான நிலையில், மர்ம மரணம் என்று வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தனது கணவர் ரமேஷை 2-வது மனைவி இன்பவள்ளி கொலை செய்ததாக முதல் மனைவி சித்ரா மற்று உறவினர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். ரமேஷ் பிறந்த நாள் அன்று தனது வீட்டுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக அவரைத் தாக்கி கொலை செய்ததாக புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கே.பி பார்க் குடியிருப்புக்கு வருவதற்கு முன்பாக 2 வது மனைவி இன்பவள்ளியுடன் ரமேஷ் அரக்கோணத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தபோது, அவரை கம்பால் அடித்து சித்ரவதை செய்ததாகவும், வலிதாங்க இயலாமல் ரமேஷ் தான் தற்கொலை செய்து கொள்ளபோவதாக கூறிய வீடியோவையும் முதல் மனைவி சித்ரா வெளியிட்டார்.

இதேபோல தான் இபோது அவருக்கு மதுவாங்கிக் கொடுத்து மாடியில் இருந்து தள்ளி விட்டிருப்பார் என்று குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து விளக்கம் அளித்த இன்பவள்ளி, யாருக்காக நாங்க சண்ட போடனும் அவரே போயிட்டாரு, போலீஸ் விசாரிக்குது எல்லா உண்மையும் வெளியே வரும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments