2024 ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை விதிக்க வேண்டும் - உக்ரைன் அதிபர் பிரான்ஸ் அரசுக்கு கோரிக்கை!
அடுத்தாண்டு பாரிசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்க தடைவிதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்ஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் நடுநிலையாளர்களாகப் பங்கேற்கலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியிருந்தது.
இந்த விவகாரம் குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எழுதிய கடிதத்தில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தீர்மானத்திற்கு எதிரான தனது முடிவை தெரிவித்துடன், ரஷ்ய விளையாட்டு வீரர்களை போட்டியிட அனுமதித்தால் போட்டியை புறக்கணிப்பதாகவும் கூறியுள்ளார்.
Comments