என்ன சார் சொல்றீங்க.. மறைந்த திருமகன் ஈவேரா நாம் தமிழர் கட்சிக்கு வந்தாரா ? பிரசாரத்தில் சீமான் வைத்த டுவிஸ்ட்

0 2628

மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வே.ரா, நாம் தமிழர் கட்சியில் சேர்வதற்காக தன்னை சந்தித்ததாக தேர்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மினரல் வாட்டர் என்ற பெயரில் அதில் உள்ள மினரலை அனைத்தும் உறிஞ்சிவிட்டு வெறும் தண்ணீரை தருவதால் தாகம் நிற்கும் ஆனால் ஆற்றல் வராது என்றும், மலைகளை உடைத்து மணலாக்குவதால் மழை பொழிவு நின்று விடும் என்றும் ஆதங்கம் தெரிவித்தார்.

மறைந்த திருமகன் ஈவேராவுடன் தனக்கு இருந்த நட்பை தெரிவித்த சீமான், அவர் முதலில் நாம் தமிழர் கட்சியில் தான் சேர்வதற்காக வந்ததாகவும் அதன் பின்னர் என்ன காரணமோ தெரியவில்லை அவர் வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments