ஈரோடு மேடையில் அமைச்சர்கள் பேசிய வீடியோவை எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் - அண்ணாமலை

0 2096
ஈரோட்டில் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் அமைச்சர்கள் பேசிய வீடியோவை தான் எடிட் செய்து வெளியிட்டதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் அமைச்சர்கள் பேசிய வீடியோவை தான் எடிட் செய்து வெளியிட்டதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டார்.

அதனை தொடங்கி வைத்தபின் பேட்டியளித்த அண்ணாமலை, கோவிலை இடிப்பது தொடர்பாக டி.ஆர்.பாலு பேசிய வீடியோவை அப்படியே வெளியிட்டுள்ளதாகவும், அவை வெட்டி ஒட்டப்படவில்லை என்றும் விளக்கமளித்தார்.

இன்னும் 10 ஆண்டுகளில் உத்தரபிரதேசம் வளர்ச்சி எந்திரமாக மாறும் என்பதால் அங்கிருந்து யாரும் தமிழ்நாட்டிற்கு வரமாட்டார்கள் என்றும் இங்கு வருவோரை வைத்து அரசியல் செய்யலாம் என நினைத்தால் அது தவறானது என்றும் அண்ணாமலை கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments