புதுடெல்லியில் 4 பள்ளிப்பேருந்துகள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் காயம்..!
டெல்லியில் 4 பள்ளிப்பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில், பள்ளி மாணவர்கள் 25 பேர் உள்பட 29 பேர் காயமடைந்தனர்.
சலீம்கர் மேம்பாலத்தில் நேர்ந்த இந்த சங்கிலித்தொடர் விபத்தில் 4 பள்ளிப்பேருந்துகள், ஒரு கார், ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனம் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
4 பேருந்துகளில் மொத்தம் 216 மாணவர்கள் பயணித்த நிலையில், மாணவர்கள் 25 பேரும், பள்ளி ஊழியர்கள் 3 பேரும் காயமடைந்தனர்.
Comments