கட்டட சுவர் இடிப்பின்போது இடிபாடுகளில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது..!
சென்னை ஆயிரம் விளக்கு கட்டட விபத்தில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில், ஏற்கனவே மூன்று பேர் கைதான நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் கட்டடம் இடிக்கும் பணியின்போது, சுற்றுச்சுவர் இடிந்து, சாலையில் நடந்து சென்ற பத்மபிரியா என்ற மென்பொறியாளர் மீது விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, ஏற்கனவே ஜேசிபி உரிமையாளர் ஞானசேகரன், ஓட்டுநர் பாலாஜி, கட்டட உரிமையாளரின் உறவினர் ஜாகீர் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தலைமறைவாக இருக்கும் கட்டட உரிமையாளர் சையது அலி பாத்திமா, பொறியாளர் ஷேக்பாய் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments