நாளை கூடுகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்.. இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் முதல்முறையாக குடியரசுத் தலைவர் உரை!

0 2140

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. ஏப்ரல் மாதம் 6ம் தேதி வரை 2 அமர்வுகளாக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நாளை நடைபெறும் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் முதல்முறையாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தவுள்ளார்.

இதையடுத்து பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். பின்னர் நாடாளுமன்றத்தில் நாளை மறுதினம் மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார்.

பின்னர் குடியரசு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெறும். ராஜஸ்தான், சட்டிஸ்கர் உள்ளிட்ட 9 மாநில சட்டபேரவைகளுக்கு இந்த ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதேபோல் அடுத்த ஆண்டு மக்களவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை கவனத்தில் கொண்டு, மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments