பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி, சமூக வலைதளத்தில் பதிவிட்ட 2 பேர் கைது!
விழுப்புரம் மாவட்டம் வானூரில் பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடி, சமூக வலைதளத்தில் பதிவிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரது மகனான லாரி டிரைவர் வெங்கடேசன், தனது நண்பர்களுடன் சேர்ந்து மாரியம்மன் கோவில் அருகே வாளால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், மூவரும் பட்டாக்கத்தியுடன் அப்பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, வெங்கடேசன், அவரது நண்பர் பால்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Comments