ஸ்ரீசைலத்தில் மலைப்பகுதி வளைவில் 30 பயணிகளுடன் சென்ற தெலுங்கானா அரசு பேருந்து விபத்து
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலத்தில் மலை பகுதி வளைவில் திரும்புகையில் பிரேக் செயலிழந்ததால், தெலுங்கானா அரசு பேருந்து விபத்துக்குள்ளானது.
30 பயணிகளுடன் மகபூப் நகருக்கு சென்ற பேருந்து, மலையில் உள்ள வளைவு ஒன்றில் திரும்பும்போது பிரேக் செயலிழந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் மெதுவாக இயக்கி பக்கவாட்டு சுவற்றில் பேருந்தை மோதி டிரைவர் நிறுத்தினார். எனவே மலைக்கு கீழே இருக்கும் அணைக்குள் பேருந்து கவிழாமல் தவிர்க்கப்பட்டது. அந்தரத்தில் பேருந்தின் முன்பக்க சக்கரங்கள் இரண்டும் தொங்கிய நிலையில் நின்றது.
ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதும் அதில் இருந்த பயணிகள் ஒருவர் பின் ஒருவராக கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் அனைவரும் மாற்று பேருந்து மூலம் மகபூப் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து விபத்தில் சிக்கிய பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது.
Comments