பிப்.1ம் தேதி தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நீட்டிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பிப்.1ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால், அன்றைய தினம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
பிப்.2ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. மேலும் வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.
Comments