'பத்ம விருதுகள் பெற்றவர்களின் வாழ்க்கை, வரலாற்றை நாட்டு மக்கள் படிக்க வேண்டும்' - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் வலியுறுத்தல்
பத்ம விருதுகள் பெற்றவர்களின் வாழ்க்கை மற்றும் வரலாற்றை படிக்குமாறு நாட்டு மக்களை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 97-வது மற்றும் இந்த ஆண்டின் முதல் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, கணிசமான எண்ணிக்கையில் பத்ம விருதுகள் பெற்றவர்கள் பழங்குடி சமூகங்கள் மற்றும் அந்த சமூகத்துடன் தொடர்புடையவர்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பழங்குடி மக்களில் ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், விவசாயிகள், கைவினை கலைஞர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் வரலாற்றை படிக்குமாறும் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.
பழங்குடியினரின் வாழ்க்கை நகர வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது என்று தெரிவித்த பிரதமர் மோடி, சாவல்கள் அனைத்தையும் மீறி, பழங்குடி சமூகங்கள் எப்போதும் தங்கள் பாரம்பரியங்களை பாதுகாக்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments