ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபாதாஸ் மீது துப்பாக்கிச்சூடு!

0 2467

ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நபா தாஸ் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நபா தாஸ் காரில் இருந்து இறங்கியதும் தலைமைக் காவலர் கோபால் தாஸ் என்பவர் நான்கைந்து முறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் நபா தாஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், விமானம் மூலம் புவனேஷ்வருக்கு அழைத்துச்செல்லப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments