4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் உயிரினங்கள் தோன்றியிருக்க வாய்ப்பு... விஞ்ஞானிகள் தகவல்
4 புள்ளி 6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சூரியனின் வெளிப்புறத்தில் இருந்து வெளியான விண்கற்களால் பூமியில் உயிரினங்கள் உண்டானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், விண்கற்களில் பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் அதிக அளவில் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இவ்விரு தனிமங்களும் ஆவியாகும் தன்மை என்பதால், குறைந்த வெப்பநிலையில் இரண்டும் நீராவியாக மாறும் தன்மை கொண்டவை என தெரிவித்துள்ளனர். எனவே 4 புள்ளி 6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் அவை, பூமியில் விழுந்து அதன்மூலம் உயிரினங்கள் தோன்றியிருக்க வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Comments