திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரா பிரபா வாகனத்துடன் ரதசப்தமி விழா நிறைவு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திர பிரபை வாகன சேவையுடன் ரத சப்தமி விழா நிறைவு பெற்றது.
ரத சப்தமியையொட்டி, 7 குதிரைகளுடன் கூடிய தங்க சூரியபிரபை வாகனத்தில் சிவப்புபட்டு உடுத்தி தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து மலையப்ப சுவாமி எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தார்.
பின்னர், சின்ன சேஷ வாகனம், தங்க கருட வாகனம், அனுமந்த வாகனங்களில் இரவு வரை மலையப்ப சுவாமி அடுத்தடுத்து எழுந்தருளினார். அப்போது, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
Comments