துருக்கி - ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 7 பேர் உயிரிழப்பு
வடமேற்கு ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கோய் நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பலமாக குலுங்கின.
மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பல பகுதிகளிலும், தப்ரிஸ் உட்பட பல நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
பயங்கர நில அதிர்வால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு இருப்பிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்திற்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Comments