பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்!
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டம் நடைபெறுகிறது.
மோடி தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்யும் இறுதியாண்டு பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய மக்கள் நலத்திட்டங்கள், குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் 30ம் தேதி நண்பகல் 12 மணியளவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசுஅழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தவும் மசோதாக்களை நிறைவேற்றவும் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பை மத்திய அரசு கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments