உப்பாற்று ஓடையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரத்த ஆறு போல் ஓடும் கழிவு நீர்..
தூத்துக்குடி மாவட்டம் கோமஸ்புரம் பகுதியிலுள்ள 6க்கும் மேற்பட்ட மீன்பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுகளால், உப்பாற்று ஓடையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர், ரத்த ஆறு போல் காட்சியளிக்கிறது.
சுத்திகரிக்கப்படாத கழிவுகளால், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், உப்பளங்களில் ரசாயனம் கலக்கும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சுத்திகரிக்காமல் கழிவை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments