ஆப்கானிஸ்தானில் கடுங்குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு..!
ஆப்கானிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருவதால், கடந்த 2 வாரங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
வடக்கு மாகாணங்களான பால்க், ஜாவ்ஜான், பஞ்ச்ஷிர் ஆகிய மாகாணங்களில் அதிகளவு இறப்புகள் நேரிடுவதாகவும், மொத்தம் 20 மாகாணங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்ததாகவும் தாலிபான் தலைமையிலான கால்நடைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குளிர்ந்த காலநிலை மற்றும் புற்கள் பற்றாக்குறையால் கால்நடைகள் பலியானதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர, கடுங்குளிரால் ஆப்கனில் 150க்கும் மேற்பட்ட மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
Comments