கொரோனா மரணங்களை மறைக்க மருத்துவர்களை கட்டாயப்படுத்தும் சீன அரசு?
சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக, கொரோனா மரணங்களை மறைக்குமாறு மருத்துவர்களை அந்நாட்டு அரசு கட்டாயப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக சுகாதார விதிகளில் சீன அரசு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக, சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான குரல்கள் என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. கொரோனாவால் மரணம் ஏற்பட்டாலும், இறப்புக்கான காரணம் நிமோனியா, இதய நோய் பாதிப்புகள் என்றே குறிப்பிடப்படுவதாக கூறப்படுகிறது.
கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்தே, 5 ஆயிரம் பேர் மட்டுமே பலியானதாக கூறி வந்த சீன அரசு, உலக நாடுகளின் அழுத்ததால் டிசம்பர் மாதம் கொரோனாவுக்கு 60 ஆயிரம் பேர் பலியானதாக அறிவித்தது. ஆனால் இறப்பு எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
Comments