நெறிமுறைகளை பின்பற்றாததே சுவர் இடிந்து சாலையோரம் நடந்து சென்ற இளம்பெண் உயிரிழக்க காரணம் - மேயர் பிரியா

0 3287

சென்னை ஆயிரம் விளக்கில் சுவர் இடிந்து சாலையோரம் நடந்து சென்ற இளம்பெண் உயிரிழக்க காரணமாக கட்டடத்தை இடிக்கும்போது, மாநகராட்சி பிறப்பித்த நெறிமுறைகளை பின்பற்றாததே விபத்துக்கு காரணம் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்டடம் இடிப்பதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டதாகவும், நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற விபத்துக்கள் இனி நடக்காமல் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் மேயர் பிரியா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments