கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் .!
கோவாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சுற்றுலாத்துறை விதித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் சூரியக் குளியல் அல்லது கடலில் குளிக்கும் போது அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் செல்ஃபி எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில், கடல் பாறைகள் மற்றும் ஆபத்தான இடங்களிலும் செல்ஃபி எடுக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் மது அருந்துவதற்கும், சமையல் செய்வதற்கும் தடை விதிக்கப்படுவதாகவும் மீறினால் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கோவா சுற்றுலாத்துறை எச்சரித்துள்ளது.
Comments