கள்ளக்குறிச்சி அருகே பள்ளிப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. மாணவ, மாணவிகள் 14 பேர் காயம்!
கள்ளக்குறிச்சி அருகே பள்ளிப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாணவ மாணவிகள் 14 பேர் காயமடைந்தனர்.
பொற்படக்குறிச்சி கிராமத்தின் ஏரிக்கரை வழியாக சென்ற பள்ளி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடதுபுறமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
பேருந்துக்குள் சிக்கிக்கொண்ட மாணவ, மாணவிகளை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்ட நிலையில், காயமடைந்த 14 பேரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சாலையின் வலதுபுறத்தில் ஏரி இருந்த நிலையில், இடதுபுறமிருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததால், பெரும் அசம்பாவிதம் நேராமல் தவிர்க்கப்பட்டது.
Comments