உண்டியல் நீட்டிய தோழரிடம் உரண்டை இழுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்ஸ்..! வேட்டியை உருவி தாக்குதல்

0 2227

புதுக்கோட்டை மாநாட்டிற்கு செல்ல கடைவீதியில் உண்டியல் குலுக்கியபடி நிதி திரட்டிய தோழர்களுடன் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் வேட்டியை உருவி கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இடுப்பில் கட்டி இருக்கும் வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் கம்பெடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவம் முதுகளத்தூர் கடைத்தெருவில் அரங்கேறி இருக்கின்றது.

ராமநாதபுரம் மாவட்டம் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன், புதுக்கோட்டையில் நடக்கும் கட்சியின் மாநாட்டிற்கு செல்வதற்காக உண்டியலை வைத்து பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து கொண்டிருந்தபோது, ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் உண்டியலை நீட்டியதால் உருவான வாக்குவாதம் கைகலப்பானதாக கூறப்படுகின்றது.

திமுகவிடம் பணத்தை வாங்கி பிழைப்பு நடத்தும் நீங்கள் எப்படி எங்களிடம் பணம் கேட்கிறீர்கள் என்று ஓபிஎஸ் தரப்பை சேர்ந்தவர்கள் கூறியதால் உக்கிரமாகி இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் கம்புகளை வைத்து மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த களேபாரங்களுக்கு இடையே ஒருவரது காலைப்பிடித்து வாரி விட போராடிய தொண்டரால் அது முடியாமல் போனது.

இதுகுறித்து தோழர் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த செந்தூர் பாண்டியன், முத்துச்சாமி, போஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments