பெற்றோரின் எதிர்பார்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது..? - தமிழ்நாட்டு மாணவி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி..!
பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற ஒரே மாணவியான மதுரையைச் சேர்ந்த கேந்திர வித்யாலயா பள்ளி மாணவி அஷ்வினி எழுப்பிய கேள்விக்கு, பிரதமர் மோடி பதிலளித்தார்.
மாணவர்கள் மன உளைச்சல் இல்லாமல் எவ்வாறு தேர்வை எதிர்கொள்ள வேண்டுமென்பது குறித்து பிரதமர் மோடி தலைமையிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 12ம் வகுப்பு மாணவி அஷ்வினி, "மாணவர்களின் மீது பெற்றோரின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது... அதை எவ்வாறு எதிர்கொள்வது?" என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பிரதமர், கிரிக்கெட் போட்டி ஸ்டேடியத்தில் சிக்சர் அடிக்க வேண்டுமென பலர் கூச்சலிடுவார்கள்... ஆனால் பேட்ஸ்மேன் அதை கண்டுகொள்ளாமல் பந்தில் கவனம் செலுத்துவார்... அதே போல, மாணவர்கள் பெற்றோர்களின் கருத்துகளை ஊக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, தடைகளாக எடுத்துக் கொள்ளக்கூடாது என விளக்கமளித்தார்.
Comments