தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலைக்கொண்டுள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது, அடுத்த 2 தினங்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என்றும், வரும் 31ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும் என்றும் கணித்துள்ளது.
இதன் காரணமாக வரும் 29, 30ம் தேதிகளில் வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தியுள்ளது.
Comments