தேர்வு விவகாரத்தில், குழந்தைகளுக்கு பெற்றோர் அழுத்தம் தரக்கூடாது: பிரதமர் மோடி

0 1917

தேர்வு விவகாரத்தில், குழந்தைகளுக்கு அழுத்தம் தரக்கூடாது என, பெற்றோரை பிரதமர் நரேந்திர நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன், டெல்லியில் இன்று பிரதமர் மோடி   கலந்துரையாடினார். இதில் காணொலி மூலம் நாடு முழுவதும் 36 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தேர்வு குறித்து ஆலோசனைகள் வழங்குமாறு, ஆண்டுதோறும் மாணவர்கள் தமக்கு கடிதங்கள் எழுதுவதாகவும்,  இந்த கடிதங்கள், தமக்கு உத்வேகத்தை அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

தேர்வு விவகாரத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர் அழுத்தம் தரக்கூடாது எனவும்,  அதே சமயம், மாணவர்கள்  தங்களது திறமையை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். நேர மேலாண்மையை திறம்பட கையாள்வதே வெற்றிக்கு முக்கிய காரணம் எனக் கூறிய  பிரதமர், அதற்கு தாயையும் மேற்கொள்காட்டினார்.

எவ்வளவு வேலை சுமை இருந்தாலும், தாய் அதனை பெரிதாக நினைப்பதில்லை என்றும், தாயை பின்பற்றினால், நேர மேலாண்மையை திறம்பட கையாளலாம் என்றும் மாணவர்களை  பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments