சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பழைய கட்டிடத்தை இடிக்கும்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் பலி

0 2567

சென்னை ஆயிரம் விளக்கில் பாழடைந்த கட்டடம் இடிக்கும்போது சாலையோரம் நடந்து சென்ற இளம்பெண் மீது விழுந்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அண்ணா சாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த இரண்டு மாடி கட்டடத்தை புல்டோசர் மூலம் இடிக்கும் பணி நடைபெற்று வந்தது.

எதிர்பாராத விதமாக கட்டடத்தின் சுவர் சாலைக்கு வெளிபுறம் இடிந்து விழுந்ததில், அந்த வழியாக நடந்து சென்றுகொண்டிருந்த 22 வயது இளம்பெண் பத்மபிரியா இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.

பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். மதுரையை சேர்ந்த பத்மபிரியா சில மாதங்களுக்கு முன்பு மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments