பிராங்ஸ்டார் ராகுலுக்கு அரிவாளால் வந்த ஆப்பு நடவடிக்கை பாயுமா ? என்ன இப்படி கிளம்பிட்டாய்ங்க ?

0 3487
பிராங்ஸ்டார் ராகுலுக்கு அரிவாளால் வந்த ஆப்பு நடவடிக்கை பாயுமா ? என்ன இப்படி கிளம்பிட்டாய்ங்க ?

ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பிராங்க் வீடியோக்களை வெளியிடும் பிராங்க்ஸ்டர் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிராங்க் வீடியோக்களை வெளியிடுவது மூலமாக பிரபலமானவர் பிராங்க் ஸ்டார் ராகுல் . சிறுவயதில் இருந்து எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் யூடியூப்பில் பிரபலமாகி தனக்கு என்று ஒரு வாழக்கையை அமைத்துக் கொண்டவர். யூடியூப்பரான ராகுல் செய்யும் ரசனையான சேட்டைகள் மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைத்தது, சிவகுமாரின் சபதம், பேச்சுலர், கூகுள் குட்டப்பா உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

இந்த நிலையில் ராகுல் கையில் அரிவாளுடன் செய்த பிராங்க் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதில் துணிக்கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களிடம் வீண் தகராறில் ஈடுபட்டு, அவர்களிடம் ரவுடியை போல அரிவாளை காட்டி மிரட்டும் வகையில் அமைந்துள்ளது.

தென்காசி அருகே எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவில் ஆட்டோ ஓட்டுனர் போல வேடமிட்டு ஒருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து ஆட்டோவில் ஏற்றுவது போல கிராமவாசிகளை பயமுறுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த பிராங்க் வீடியோக்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களை கொண்டு மிரட்டும் தொனியில் அமைந்துள்ளதாக ரோஹித்குமார் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பிராங்க்ஸ்டர் ராகுல் என்ற பெயரில் இயங்கி வரும் யூடியூப் சேனலில், ராகுல் என்பவர் முதியவர்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களை கொண்டு மிரட்டுவதாகவும், இதனால் அந்த முதியவருக்கு ஏதேனும் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் வீடியோ ஆதாரங்களோடு புகார் அளித்த சில மணி நேரத்திலே ஒரு வீடியோ அகற்றப்பட்ட நிலையில் மற்ற வீடியோக்கள் அப்படியே உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments