அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு கடும் சரிவினைச் சந்தித்துள்ளது.
நேற்றைய வர்த்தக நிலையில் டாலருக்கு நிகரான அந்நாட்டு ரூபாயின் மதிப்பு 24 ரூபாய் என்ற நிலைக்குச் சென்றது. இதையடுத்து முன் எப்போதும் இல்லாத வகையில் டாலருக்கு நிகரான மதிப்பு 225 ரூபாயாகச் சரிந்தது.
இதனால் சர்வதேச நாணய நிதியம் தனது கட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 6 புள்ளி 5 பில்லியன் டாலர் நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது.
Comments