ஆண்ட்ராய்ட், டேப்லட்களில் மூன்றாம் தரப்பு சர்ச் எஞ்சின்களைப் பயன்படுத்தலாம் - கூகுள் நிறுவனம்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, ஆண்ட்ராய்டு பயனர்கள் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை சர்ச் எஞ்சின்களாகப் பயன்படுத்த அனுமதிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
பயனர்கள் புதிய ஆண்ட்ராய்டு ஃபோன் அல்லது டேப்லெட்டை புதிதாக இயக்கத் தொடங்கும் போதெல்லாம் தங்களுக்கு விருப்பமான சர்ச் எஞ்சினைத் தேர்வு செய்யலாம் என கூறியுள்ளது.
கூகுள் மேப்ஸ் போன்ற ஆண்ட்ராய்டு சாதனங்களில் முன்பே நிறுவப்பட்ட கூகுளுக்குச் சொந்தமான பயன்பாடுகளை நீக்க பயனர்களை அனுமதிக்கும் பிற நடவடிக்கைகளையும் இந்திய வணிகப் போட்டி ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
பல சந்தைகளில் மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காக கூகுள் மீது 162 மில்லியன் டாலர் அபராதம் விதித்த இந்திய வணிகப் போட்டி ஆணையம் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.
Comments