டெல்லியில் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அணிவகுப்பில் புதிய பல அம்சங்கள் இடம்பெற உள்ளன..!
டெல்லியில் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அணிவகுப்பில் முதன் முறையாக பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.
முதல்முறையாக கடமை பாதையில் குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெற உள்ளன.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தான் பதவியேற்ற பின்னர், முதன் முறையாக கடமைப் பாதையில் கொடி ஏற்றவுள்ளார்.
வழக்கமாக குடியரசு தின அணிவகுப்பிற்கு முன், 21 குண்டுகள் முழங்க ஆங்கிலேயர் காலத்து பழமையான துப்பாக்கிகளுடன் கூடிய பீரங்கிகள் பயன்படுத்தபடும் நிலையில், இந்தாண்டு 105 மில்லி மீட்டர் இந்திய பீல்ட் ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
எல்லை பாதுகாப்பு படையின் ஒட்டகக் குழுவின் அணிவகுப்பில் முதன்முறையாக பெண்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், முதல் முறையாக குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டின் தலைவரும், அணிவகுப்பில் அந்நாட்டு ராணுவமும் பங்கேற்கின்றனர்.
Comments