62 வயதில் முகநூல் காதலியை திருமணம் செய்த மதபோதகர்.. சொத்துக்கள் தங்களுக்கு வராது என்பதால் குடும்பத்தினர் செய்த செயல்..!
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே 62 வயது மதபோதகர், இந்தோனேஷியாவை சேர்ந்த முகநூல் காதலியை திருமணம் செய்ததால், சொத்துக்கள் தங்களுக்கு வராது என்பதால் அதனை எதிர்த்த குடும்பத்தினர், மனைவியை வீட்டிற்குள் சிறை வைத்து, மதபோதகரை வீட்டிற்கு வெளியே நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
பருத்திவிளையை சேர்ந்த கிறிஸ்டோபர், முகநூல் மூலம் அறிமுகமான 45 வயதான திபோராவுக்கு மதபோதனை செய்து வந்த நிலையில், அவர் மீது காதல்வயப்பட்டு, டிசம்பர் 21ஆம் தேதி நாகர்கோயிலுக்கு வரவழைத்து திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு மனைவிக்கு உணவு வாங்குவதற்காக வெளியே சென்றிருந்த நேரத்தில் திபோராவை வீட்டிற்குள் வைத்து பூட்டிய சகோதரர்கள், வெளி கேட்டையும் பூட்டியுள்ளனர். கிறிஸ்டோபர் போலீஸ் அவசர அழைப்பு எண் 100-க்கு போண் செய்து புகாரளித்தார். அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படாததால் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்த நிலையில் கிறிஸ்டோபரை வீட்டிற்குள் அனுமதித்தனர்.
பாதுகாப்பிற்காக சில போலீசாரை அங்கு நிறுத்தி சென்ற நிலையில் நீதிமன்றத்தின் மூலம் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள காவல்துறையினர் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments