தென்கிழக்கு வங்கக்கடலில் ஜன.27ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 27ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது அதற்கடுத்த 3 தினங்களில் மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்பதால், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.
Comments