ரூ.30 லட்சம் கேட்டு கணவன்-மனைவி காரில் கடத்தல்... 6பேர் கொண்ட கூலிப் படையினரை பிடிக்கும் பணி தீவிரம்

0 1878

மணப்பாறை அருகே தம்பதியைக் கடத்தி 30 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆபிசர்ஸ் டவுனில் வசித்து வரும் பழனியப்பன்- சந்திரா ஆகியோர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் சென்னைக்கு காரில் வந்தபோது சமயபுரம் அருகே 6பேர் கொண்ட கும்பல் வழிமறித்து   கடத்தி சென்றதாக

கூறப்படுகிறது. பின்னர் 30 லட்சம் ரூபாய் பணம் கேட்டு அவர்களின் மகன் கலைச்செல்வனிடம் கடத்தல் கும்பல் மிரட்டியுள்ளது. 

இதுதொடர்பாக  புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் திட்டப்படி பணத்தை கலைச்செல்வன் கொடுக்கச் சென்ற போது அதனை வாங்குவதற்காக வந்த காளிதாஸ் என்பவன் போலீசாரிடம் சிக்கிக் கொண்டான்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சந்திராவை கடத்தி பணம் பறிக்க திட்டம் போட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதற்கிடையில்,  நகை, பணத்தை பறித்துக் கொண்டு கடத்தல் கும்பல் சந்திராவை இறக்கி விட்டு தப்பிச் சென்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments