குடியரசுதின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க டெல்லி வந்தார் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்ததினராகப் பங்கேற்க டெல்லி வந்துள்ள எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி, பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இருதரப்பு உறவுகள் குறித்தும், வேளாண்மை, டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகம் தொடர்பாகவும் இருவரும் விவாதிக்க உள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையும் எகிப்து அதிபர் இன்று சந்தித்துப் பேசுகிறார்.
முன்னதாக மூன்றுநாள் பயணமாக டெல்லி வந்த எகிப்து அதிபருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எகிப்து அதிபரின் வருகை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Comments