அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் OpenAI மீது மைக்ரோசாப்ட் 10 பில்லியன் டாலர் முதலீடு..!
மைக்ரோசாப்ட் நிறுவனம் மேலும் 10 பில்லியன் அமெரிக்க டாலரை அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி அமைப்பான OpenAI ல் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே, 3 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை ஒரு சில வினாடிகளில் எழுதும் வகையில் OpenAI ஆல் உருவாக்கப்பட்டுள்ள ChatGPT கணினியின் அடுத்த பெரிய அலை என்று மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்தார்.
தனது போட்டி நிறுவனங்களான கூகுள், மெட்டா மற்றும் ஆப்பிள் ஆகியவற்றுடனான போட்டியை சமாளிக்க ChatGPT மீதான முதலீடு தேவையானது என்றும் சத்யாநாதெள்ளா தெரிவித்துள்ளார்.
Comments