சுருக்குமடி வலையை பயன்படுத்த நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி
கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
மீனவர்கள் பயன்படுத்தும் சுருக்குமடி வலையால் கடல்வளம், சிறிய மீன் வகைகள், பவளப்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி இந்த வலைக்கு தமிழக அரசு தடை விதித்தது.
இதற்கு எதிராக சில மீனவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி போபண்ணா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு கூறியது.
அதில், கரையில் இருந்து 12 கடல் மைல்களுக்கு அப்பால் மட்டுமே சுருக்குமடி வலையை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் என்றும், மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலையை பயன்படுத்த முடியும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Comments