அமெரிக்காவில் அடுத்தடுத்து மேலும் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்... 2 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலி

0 1664

அமெரிக்காவில் அடுத்தடுத்து நடைபெற்ற 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 2 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலியாகினர்.

லாஸ் ஏஞ்செல்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடைபெற்று 48 மணி நேரத்தை கடப்பதற்குள், அங்கு மேலும் 3 இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அயோவாவிலுள்ள டெஸ் மொயின்ஸ் ஸ்டார்ட்ஸ் ரைட் ஹியர் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், பள்ளி சிஇஓ உள்ளிட்ட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

கலிஃபோர்னியா மாகாணத்தில் இருவேறு பண்ணைகளில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சீன தொழிலாளர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ஜாவோ சுன்லி என்ற முதியவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments