ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பெண் ஊழியரிடம் தகராறு - இறக்கிவிடப்பட்ட பயணிகள்

0 2167

டெல்லியில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்த இரண்டு பயணிகள் முறையற்ற நடத்தை காரணமாக இறக்கி விடப்பட்டனர்.

ஹைதராபாத் புறப்படவிருந்த அந்த விமானத்தில் ஏறிய ஆண் பயணி ஒருவர், விமானப் பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பயணிக்கும் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்து பாதுகாப்புப் படை அதிகாரிகள், பெண் ஊழியரிடம் தவறாக நடந்துக் கொண்ட பயணி மற்றும் அவருடன் வந்திருந்த மற்றொரு பயணி இருவரையும் கீழே இறக்கி விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர், எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோரினார். இருப்பினும், பிரச்சனை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அவர்கள் இருவரும் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments