மனைவியின் தந்தை வசிக்கும் வீட்டை கேட்டு ஐ.டி ஊழியர் செய்த கொடுமை..! 27 சவரன் நகைகள் அம்பேல்..!

0 2659

நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்ட இரண்டரை மாதத்தில் மனைவியிடம் இருந்து 27 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு , அடித்து கொடுமை படுத்தியதாக சென்னை ஐடி ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் அஜித்ராம் பிரதீப். 33 வயதான இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

அஜித்ராம் பிரதீப்புக்கும் கட்டையன்விளையை சேர்ந்த 28 வயதான சுவிதாவுக்கும் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது சீர்வரிசை பொருட்களுடன் 92 சவரன் நகைகளை வரதட்சனையாக மணமகன் வீட்டார் பெற்றதாக கூறப்படுகின்றது. பிரதீப்புக்கு கடன் பிரச்சினை இருந்ததால், அதனை சரிகட்ட திருமணமான ஆறாவது நாளிலேயே மனைவியிடம் பணம் வாங்கிவர கூறியதாகவும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. பின்னர் அவரது நகைகளை எடுத்துச் சென்றுள்ளார்

சம்பவத்தன்று சுவிதாவிடம் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்த பிரதீப், உனது தந்தையின் வீட்டு பத்திரத்தை தனது பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகின்றது.

கழுத்து, கன்னம் உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்த சுவிதா தனது தந்தைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அவர் விரைந்து சென்று தனது மகளை மீட்டு, சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் சேர்த்தார்.

இது தொடர்பாக சுசீந்திரம் போலீசில் சுவிதா புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் பிரதீப் மீது, வரதட்சனை கொடுமை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்

திருமணத்துக்கு 5 நாட்களுக்கு முன்பு தாய் உயிரிழந்ததால் பரிதவித்த சுவிதா, நிச்சயத்த படி ஐந்தாவது நாள் பிரதீப்பை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இரண்டரை மாதத்திற்குள் பத்துக்கும் மேற்பட்ட முறை பிரதீப் தன்னை தாக்கியதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்த பின்னரும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் சுவிதா வேதனை தெரிவித்தார்.

வரதட்சணையாக வழங்கப்பட்ட 95 சவரன் நகைகளில் 27 சவரன் நகைகளை பறித்துச் சென்ற பிரதீப் அதனை அடகு வைத்தாரா ? அல்லது விற்பனை செய்தாரா ? என்பது தெரியவில்லை என்றும் சுவிதா தெரிவித்தார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments